ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார், ரவிக்குமார் - கவனக்குறைவால் தவறு நடந்து விட்டதாக விளக்கம்

ஊக்கமருந்து சோதனையில் ரவிக்குமார் சிக்கினார். கவனக்குறைவால் தவறு நடந்து விட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2019-12-11 23:52 GMT
புதுடெல்லி,

காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்றவர் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் ரவிக்குமார். சமீபத்தில் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 2 ஆண்டு வரை தடை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி சில தினங்களில் அவருக்கு என்ன தண்டனை என்பதை அறிவிக்க இருக்கிறது.

தலைவலி மற்றும் ரத்தகொதிப்புக்காக டாக்டர் தந்த மருந்துகளை சாப்பிட்டதாகவும், உலக ஊக்கமருந்து தடுப்பு கழகத்தால் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இருந்த மருந்தை கவனக்குறைவாக உட்கொண்டது பின்னர் தான் தெரிய வந்ததாகவும் ரவிக்குமார் தெரிவித்தார். ‘எனது விளக்கத்தை தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை புரிந்து கொண்டுள்ளது. வேண்டுமென்றே ஊக்கமருந்தை சாப்பிடவில்லை. கவனக்குறைவாக தவறு நடந்து விட்டதை சுட்டிகாட்டியுள்ளேன். அதனால் குறைந்த தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறேன்’ என்றும் குறிப்பிட்டார். 29 வயதான ரவிக்குமார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்