டேபிள் டென்னிஸ் சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம்

டேபிள் டென்னிஸ் போட்டியில், சென்னை பல்கலைக்கழக பெண்கள் அணிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

Update: 2020-03-03 23:18 GMT
சென்னை,

கேலோ இந்தியா முதலாவது பல்கலைக்கழக விளையாட்டு போட்டி ஒடிசா மாநிலத்தில் நடந்தது. இதில் புவனேசுவரத்தில் நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் சென்னை பல்கலைக்கழகம்-டெல்லி பல்கலைக்கழக அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சென்னை பல்கலைக்கழக அணி 3-0 என்ற கணக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. தோல்வி அடைந்த டெல்லி பல்கலைக்கழக அணி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

மேலும் செய்திகள்