2028 ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 10 இடத்தைப் பிடிக்கும்: விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ

2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-10 00:52 GMT
புதுடெல்லி,

2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி அதிகப் பதக்கங்களை வென்று முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டகிராமில் பேசிய அவர், “ 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் பெரிய இலக்கு உள்ளது. ஆனால், 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். நான் விளையாட்டுத்துறை மந்திரியானபோது குறைவான திறமைகளே நம்மிடம் இருந்தன. 2024-ல் நம்மிடம் அதிக ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை வெல்லும் அணி இருக்கும். 2028-ல் முதல் 10 இடங்களைப் பிடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்துள்ளோம். அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இளம் வீரர்கள் தான் நம்முடைய வருங்கால சாம்பியன்கள். இதற்கான பலனை 2024- ஆண்டிலேயே தெரிந்துகொள்வோம். ஆனால் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் பத்து இடங்களில் நாம் இருப்போம்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்