களம் இறங்கும் முன்பே உலக கோப்பை குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதி

உலக கோப்பை குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நேற்று தொடங்கியது. கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டியில் இருந்து நிறைய வீரர், வீராங்கனைகள் விலகி உள்ளனர்.

Update: 2020-12-17 22:09 GMT
புதுடெல்லி, 

இந்த போட்டி அட்டவணையின்படி, உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் அமித் பன்ஹால் (52 கிலோ பிரிவு), இந்திய வீராங்கனைகள் மனிஷா (57 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), பூஜா ராணி (75 கிலோ) ஆகியோர் நேரடியாக அரைஇறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். இதனால் களம் இறங்கும் முன்பே இந்தியாவுக்கு 4 பதக்கம் உறுதியாகி விட்டது. உடல் தகுதி பிரச்சினை காரணமாக இந்திய வீரர்கள் ஷிவதபா (63 கிலோ), சஞ்சீத் (91 கிலோ) ஆகியோர் இந்த போட்டியில் இருந்து விலகி உள்ளனர். இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் ரோகித் காஷ்யப் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்ததை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக வீரர், வீராங்கனைகள் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்