தேசிய மல்யுத்தம்: ரெயில்வே வீரர் பிரித்தம் தங்கப்பதக்கம் வென்றார்

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ரெயில்வே வீரர் பிரித்தம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

Update: 2021-11-13 20:26 GMT
கோண்டா,

தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 74 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் ரெயில்வே வீரர் பிரித்தம் 11-0 என்ற புள்ளி கணக்கில் சமீபத்தில் நடந்த ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்ற யாஷ்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். 

ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி 4 ஆண்டுகள் தடைக்கு பிறகு களம் திரும்பிய நார்சிங் பான்சம் யாதவ் வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைந்தார். 

79 கிலோ எடைப்பிரிவின் இறுதி சுற்றில் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப்பதக்கம் வென்றவரான உத்தரபிரதேச வீரர் கவுரவ் பாலியன் 5-3 என்ற புள்ளி கணக்கில் ஜிதேந்தர் கின்ஹாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை வென்றார்.

மேலும் செய்திகள்