தீபிகா படுகோன் தந்தைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

1980 ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை பிரகாஷ் படுகோன் வென்றார்

Update: 2021-11-18 15:03 GMT
டெல்லி 

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் தந்தை பிரகாஷ் படுகோன். 66 வயதான  பிரகாஷ் படுகோன் 1980-களில் பேட்மிண்டன் உலகில் நம்பர் 1 வீரராக வளம் வந்தவர்.

முன்னாள் இந்திய  பேட்மிண்டன்  வீரர் பிரகாஷ் படுகோனுக்கு  உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு  வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது.

1980 ஆண்டு  நடைபெற்ற இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை  பிரகாஷ் படுகோன் வென்றார் .இதன் மூலம் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றார் . 

இவரது சாதனையை பாராட்டி இந்திய அரசு இவருக்கு 1972 ஆம் ஆண்டில்  அர்ஜுனா விருதும் 1982 ஆம் ஆண்டு  பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. 

வாழ்நாள் சாதனையாளர் விருது வென்றுள்ள பிரகாஷ் படுகோன்  அவர்களுக்கு இந்திய பேட்மிண்டன்  சங்கம் டுவிட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

அதில் , இந்திய பேட்மிண்டன் துறையை வெற்றி பாதைக்கு வழிவகுத்த பிரகாஷ் படுகோன்  அவர்களுக்கு உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு   வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்