ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!

Update:2023-10-06 06:32 IST
Live Updates - Page 2
2023-10-06 11:09 GMT

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதி வருகின்றன. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

2023-10-06 10:54 GMT

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதுகின்றன. முதல் பாதியில் இதுவரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. 

2023-10-06 10:49 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 21 தங்கம், 33 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 92 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-06 10:45 GMT

மல்யுத்தம்:

மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 76 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - மங்கோலியா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 6-3 என்ற புள்ளி கணக்கில் மங்கோலிய வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை கிரண் வெண்கலப்பதக்கம் வென்றார்.

2023-10-06 09:51 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 21 தங்கம், 33 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 91 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-06 09:16 GMT

மல்யுத்தம்:

மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 62 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - சீனா மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 7-5 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவின் சோனம் அபார வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் மல்யுத்தம் பெண்கள் பிரிஸ்டைல் 62 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சோனம் வெண்கலப்பதக்கம் வென்றார்.

2023-10-06 08:48 GMT

வில்வித்தை: 

வில்வித்தை ஆண்கள் ரிகர்வி குழு இறுதிப்போட்டியில் இந்தியா - தென்கொரியா மோதின. இப்போட்டியில் 5-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தென்கொரியா தங்கப்பதக்கம் வென்றது. போட்டியில் தோல்வியடைந்த இந்தியா வெள்ளிப்பதக்கம் வென்றது.

2023-10-06 08:29 GMT

ஆசிய விளையாட்டுப் போட்டியில் செபக் டக்ரா போட்டியில் இந்தியா வெண்கல பதக்கம் வென்றுள்ளது. பெண்கள் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தாய்லாந்து அணியை வீழ்த்தியதால் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.



2023-10-06 08:19 GMT

கபடி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசிய விளையாட்டு: ஆண்கள் கபடி அரையிறுதி போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 61-14 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

2023-10-06 07:32 GMT

கபடி போட்டி: ஆண்கள் அரை இறுதிப் போட்டியில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் தற்போது வரை  21-5 என்ற புள்ளிகள் கணக்கில்  இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது.


மேலும் செய்திகள்