ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!

Update:2023-10-06 06:32 IST
Live Updates - Page 3
2023-10-06 06:52 GMT

பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவிடம் தோல்வி அடைந்தது. இந்தியாவின் பிரனாய் - சீனாவின் லி ஷிபெங் அரையிறுதி போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். இதில் பிரனாய் 16-21, 9-21 என்ற நேர் செட் கணக்கில் சீன வீரரிடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன்  போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்துடன் நடையை கட்டியது.



2023-10-06 06:31 GMT

ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும் பாகிஸ்தான் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.

2023-10-06 05:50 GMT

ஆசிய விளையாட்டு; சாஃப்ட் டென்னிஸ் ’குரூப்- பி’ பெண்கள் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தில் இந்தியாவின் ஆத்யா திவாரியும் சீன தைபே அணியின் ஷு டிங் லோ-வும் மோதினர். இந்த போட்டியில் இந்திய அணி 1-4 என்ற செட் கணக்கில் சீன தைபேவிடம் வீழ்ந்தது.

2023-10-06 05:34 GMT

மல்யுத்தம் ஆண்கள் 65-கிலோ எடை பிரிவு ஃப்ரீ ஸ்டைல் அரை இறுதி போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் ரஹ்மான் அமுஸத்கலிலியை எதிர்த்து விளையாடினார். இதில் பஜ்ரங் புனியா 1-8 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.   


2023-10-06 05:09 GMT

மல்யுத்தம் ஆண்கள் ப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா பஹ்ரைன் வீரரை 4-0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-06 04:31 GMT

ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் இந்திய அணி வங்காளதேச அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.



2023-10-06 03:56 GMT

ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு வெண்கல பதக்கம்

ஆசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை போட்டியில் இந்திய பெண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றுள்ளது.  அங்கிதா பகத், பஜன் கவுர், சிம்ரஞ்சித் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி,வியட்நாம் அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது.


2023-10-06 03:10 GMT

மல்யுத்தம் பெண்கள் ப்ரீ ஸ்டைல் 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சோனம் மாலிக் காலிறுதிக்கு முன்னேறினார்.

2023-10-06 03:01 GMT

ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் வங்காளதேச அணிகளும் மோதுகின்றன. இப்போட்டியில் வங்காளதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு 97 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2023-10-06 02:20 GMT

கபடி போட்டி



ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கபடி அரையிறுதி போட்டியில் இந்தியாவும் நேபாள அணிகளும் மோதின. இதில் இந்திய அணி 61-17 என்ற புள்ளிகள் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்திய அணிக்கு குறைந்தபட்சம் வெள்ளி பதக்கமாவது கிடைப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் செய்திகள்