ஆசிய விளையாட்டு: ஹாக்கியில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா...!

ஆசிய விளையாட்டு தொடரில் ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது.;

Update:2023-10-06 06:32 IST

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

Live Updates
2023-10-06 13:45 GMT

பேட்மிண்டன்:

பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் அரையிறுதி சுற்றில் இந்தியா - மலேசியா மோதின. இப்போட்டியில் தொடக்க முதலே இந்திய இணை சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிரங் சந்திரசேகர் ஷெட்டி ஆதிக்கம் செலுத்தினர். இறுதியில் 21-17, 21-12 என்ற நேர் செட்களில் மலேசியாவை வீழ்த்தி இந்திய இணை அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.

2023-10-06 12:37 GMT

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 65 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதின. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் வீரர் கைகி 10-0 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீரர் பஜ்ரங் புனியாவை வீழ்த்தினார். இதன் மூலம் ஜப்பான் வீரர் கைகி வெண்கலப்பதக்கம் வென்றார்.

2023-10-06 12:06 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 95 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-06 12:05 GMT

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. 

2023-10-06 11:47 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 21 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 94 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-06 11:43 GMT

பிரிட்ஜி:

பிரிட்ஜி ஆண்கள் குழு இறுதிப்போட்டியில் இந்தியா - ஹாங்காங் மோதின. இப்போட்டியில் 17-12 என்ற புள்ளி கணக்கில் இந்தியாவை வீழ்த்தி ஹாங்காங் வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

2023-10-06 11:31 GMT

ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதி வருகின்றன. இப்போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

2023-10-06 11:23 GMT

 ஹாக்கி:

ஹாக்கி ஆண்கள் இறுதிப்போட்டியில் இந்தியா - ஜப்பான் மோதி வருகின்றன. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

2023-10-06 11:16 GMT

பதக்க பட்டியல்:

ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் 21 தங்கம், 33 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 93 பதக்கங்களுடன் இந்தியா பதக்க பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

2023-10-06 11:15 GMT

மல்யுத்தம்:

மல்யுத்தம் ஆண்கள் பிரிஸ்டைல் 57 கிலோ வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா - சீனா மோதின. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் ஆமென் 11-0 என்ற புள்ளி கணக்கில் சீன வீரரை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றார்.

மேலும் செய்திகள்