கனடா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

21-17, 21-14 என்ற நேர்செட்களில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று அசத்தினார்.

Update: 2023-07-09 04:06 GMT

Image Courtesy : PTI 

கல்காரி,

கனடாவின் கல்காரி நகரில் கனடா ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் நடந்து வருகின்றன.இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் கென்ட்டா நிஜிமோட்டாவுடன் இந்திய வீரர் லக்சயா சென் மோதினார் .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21-17, 21-14 என்ற நேர்செட்களில் இந்திய வீரர் லக்சயா சென் வெற்றி பெற்று அசத்தினார். இதன்மூலம் இறுதிப் போட்டிக்கு லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்