ஒடிசா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: உன்னதி ஹூடா, கிரண் ஜார்ஜ் சாம்பியன்

நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா, இஷாராணி பருவா உடன் மோதினார்.;

Update:2025-12-15 08:55 IST

image courtesy: BAI Media twitter

கட்டாக்,

ஒடிசா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கட்டாக்கில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய இளம் நட்சத்திரம் உன்னதி ஹூடா, சக நாட்டவரான இஷாராணி பருவா உடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற நேர் செட்டில் இஷாராணி பருவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

அதே போல ஆண்கள் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் கிரண் ஜார்ஜ், இந்தோனேசியாவின் முகமது யூசுப் உடன் மோதினார். இந்த போட்டியில் கிரண் ஜார்ஜ் 21-14, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் 65 நிமிடங்கள் போராடி முகமது யூசுப்பை சாய்த்து கோப்பையை கைப்பற்றினார்.

Tags:    

மேலும் செய்திகள்