உலக பேட்மிண்டன் தரவரிசை: லக்சயா சென், சாத்விக்- சிராக் ஜோடி முன்னேற்றம்

லக்சயா சென் உலக பேட்மிண்டன் தரவரிசையில் முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.;

Update:2022-11-08 23:50 IST

Image Courtesy: AFP  

புதுடெல்லி,

பி.டபிள்யு.எப் உலக பேட்மிண்டன் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்சயா சென் (21 வயது) முதல் முறையாக 6-வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார். சர்வதேச அரங்கில் சிறப்பான பார்மில் இருக்கும் லக்சயா, 25 போட்டிகளில் 76,424 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

அதே போல் ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஒரு இடம் முன்னேறி ஏழாவது இடத்தை பிடித்துள்ளனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் 23-வது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

கணுக்கால் காயம் காரணமாக பர்மிங்காம் போட்டிக்குப் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடாத இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்