மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

Update: 2024-05-26 08:54 GMT

image courtesy: AFP 

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவை சேர்ந்த வாங் ஜி யி உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை கைப்பற்றிய சிந்து அடுத்த இரு செட்டுகளையும் இழந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த ஆட்டத்தில் வாங் ஜி 16 - 21, 21-5 மற்றும் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். 

Tags:    

மேலும் செய்திகள்