உலக பாரா தடகளம்; 17 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்த இந்தியா

உலக பாரா தடகளத்தில் 17 பதக்கங்களுடன் இந்தியா 6-வது இடம் பிடித்தது.

Update: 2024-05-26 05:10 GMT

கோப்புப்படம்

கோபே,

மாற்றுத் திறனாளிகளுக்கான 11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானின் கோபே நகரில் கடந்த 9 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் டி12 பிரிவில் (பார்வை குறைபாடு உடையவர்கள்) இந்திய வீராங்கனை சிம்ரன் ஷர்மா 24.95 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவில் 2-வது இடம் பிடித்த இலங்கை வீரர் தினேஷ் பிரியந்தா ஹெராத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து 3-வது இடம் பிடித்த இந்திய வீரர் ரிங்கு ஹூடா முடிவு தரம் உயர்த்தப்பட்டு வெள்ளிப்பதக்கமும், 4-வது இடம் பெற்ற மற்றொரு இந்திய வீரர் அஜீத் சிங் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

இந்த போட்டியில் இந்தியா 6 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் 6-வது இடம் பிடித்தது. உலக பாரா தடகள போட்டியில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். இதற்கு முன்பு 2023-ம் ஆண்டு இந்தியா 10 பதக்கங்கள் (3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்) வென்றதே அதிகபட்சமாக இருந்தது. சீனா 33 தங்கம், 30 வெள்ளி, 24 வெண்கலம் என 87 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.

Tags:    

மேலும் செய்திகள்