பிரெஞ்ச் ஓபனில் ‘வைல்டு கார்டு’ வழங்க முடிவா? ‌ஷரபோவாவுக்கு, ராட்வன்கா எதிர்ப்பு

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ரஷிய டென்னிஸ் புயல் மரிய ‌ஷரபோவாவுக்கு, 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது.

Update: 2017-04-22 23:15 GMT

வார்சா,

‌ஷரபோவாவுக்கு இப்போது தரவரிசை இல்லாததால் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபனில் (மே28 முதல் ஜூன் 11–ந்தேதி வரை நடக்கிறது) நேரடியாக பங்கேற்க ‘வைல்டுகார்டு’ சலுகையை எதிர்பார்த்து கார்த்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ‘வைல்டு கார்டு’ வழங்க, போலந்து வீராங்கனை அக்னீஸ்கா ராட்வன்ஸ்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலக தரவரிசையில் 8–வது இடம் வகிக்கும் ராட்வன்ஸ்கா அளித்த பேட்டியில், ‘‌ஷரபோவா ஜெர்மனியிலும், அதைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் விளையாடப்போகிறார். ஆனால் கிராண்ட்ஸ்லாமை பொறுத்தவரை பிரெஞ்ச் ஓபன் மற்றும் விம்பிள்டன் போட்டி அமைப்பாளர்கள் இதுவரை அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை. அந்த நிலை தொடர வேண்டும். காயம், உடல்நலம் பாதிப்பு அல்லது விபத்தில் சிக்கி அதனால் நீண்ட காலம் ஆடாமல் தரவரிசையை இழக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மட்டுமே இந்த மாதிரி (வைல்டு கார்டு) சலுகை வழங்கப்பட வேண்டும். இது போன்று ஊக்கமருந்து சோதனையில் சிக்கி தடை பெற்றவர்களுக்கு வழங்கக்கூடாது. ‌ஷரபோவா, சிறிய போட்டிகளில் இருந்து விளையாடி தனது டென்னிஸ் வாழ்க்கையை புதுப்பிக்கட்டும்’ என்றார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரமான ‌ஷரபோவாவுக்கு ‘வைல்டு கார்டு’ கிடைக்குமா என்பது மே 15–ந்தேதி தெரிய வரும்.

மேலும் செய்திகள்