உலக டென்னிஸ் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி முதலிடம்

உலக டென்னிஸ் தரவரிசையில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி முதலிடத்தில் உள்ளனர்.

Update: 2019-07-22 23:52 GMT
பாரீஸ்,

உலக டென்னிஸ் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச பெண்கள் டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி (6,605 புள்ளிகள்) முதலிடத்தில் தொடருகிறார். ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,257 புள்ளிகள்) 2-வது இடத்திலும், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா (6,055 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ருமேனியாவின் சிமோனா ஹாலெப் (5,933 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நெதர்லாந்து வீராங்கனை கிகி பெர்டென்ஸ் (5,130 புள்ளிகள்) 5-வது இடத்திலும், செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா (4,785 புள்ளிகள்) 6-வது இடத்திலும், உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (4,638 புள்ளிகள்) 7-வது இடத்திலும், அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் (3,802) 8-வது இடத்திலும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (3,411 புள்ளிகள்) 9-வது இடத்திலும், பெலாரஸ் வீராங்கனை சபலென்கா (3,365 புள்ளிகள்) 10-வது இடத்திலும் மாற்றமின்றி நீடிக்கின்றனர். பெல்ஜியம் வீராங்கனை எலிசி மெர்டென்ஸ் ஒரு இடம் முன்னேறி 20-வது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ருமேனியாவில் நடந்த சர்வதேச போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபாகினா 41 இடங்கள் ஏற்றம் கண்டு 65-வது இடத்தை பிடித்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்