புதிய அமைச்சராக பதவியேற்றார் டிஆர்பி ராஜா

தமிழ்நாடு அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா.

Update: 2023-05-11 05:12 GMT

சென்னை,

மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா தமிழகத்தின் புதிய அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் டிஆர்பி ராஜாவுக்கு கவர்னர் ரவி பதவிப்பிராமணம் செய்து வைத்தார். திமுக நாடாளுமன்ற குழு தலைவரான டி.ஆர்.பாலுவின் மகன் ராஜா மன்னார்குடியில் 3 முறை எம்.எல்.ஏவாக தேர்வானார்.

டி.ஆர்.ராஜா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சாக பதவியேற்றப்பின் ராஜ்பவனில் கவர்னருடன் முதல்-அமைச்சர் மற்றும் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அமைச்சர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். கவர்னர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக அரசின் அமைச்சரவையில் புதிய அமைச்சராக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு என்ன இலாகா ஒதுக்கப்படும் என விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்