3-வது முறையாக பிரதமராகும் மோடி: பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்திய பெண்

சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி,மோடி பிரதமராக வேண்டும்,அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.;

Update:2024-06-07 08:10 IST

பழனி,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார். இதனை பா.ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி நேற்று பழனிக்கு வந்தார். பின்னர், 3-வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்க இருப்பதையொட்டி அவர், பழனி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்த உள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் மோடியின் உருவப்படம் கொண்ட முகமூடியை அணிந்தபடி, சரவணப்பொய்கை முடிக்காணிக்கை நிலையத்தில் பூமுடி செலுத்தினார். அவரை அங்கு வந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்தனர்.

சஷ்டிசேனா அமைப்பின் தலைவர் சரஸ்வதி, கடந்த மாதம் 28-ந்தேதி பழனி கோவிலுக்கு வந்து 3-வது முறையாக மோடி பிரதமராக வேண்டும், கோவை தொகுதியில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று மடிப்பிச்சை ஏந்தி வழிபட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்