'லால் சலாம்' நடிகையின் புதிய பட டீசர் வெளியீடு

இந்தப் படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2025-06-08 00:52 IST

சென்னை,

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் '8 வசந்தலு' என்ற படத்தை தயாரித்து வருகிறது. பனீந்திர நரசெட்டி இயக்கும் இப்படத்தில் லால் சலாம் படத்தில் நடித்திருந்த அனந்திகா சனில்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

மேலும், ரவி தேஜா துக்கிராலா, சுமந்த் நிட்டூர்கர், ஹனு ரெட்டி, கண்ணா பசுநூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

"8 வசந்தலு" படத்தின் முதல் டீசர் சமீபத்தில் வெளியாகி இருந்தநிலையில், தற்போது புதிய டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வருகிற 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்