'96' நடிகையின் 'தம்முடு' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு
'சதுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா;
ஐதராபாத்,
கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'சதுரன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. இப்படத்தை தொடர்ந்து 'வெற்றிவேல்', 'இவர் யார் என்று தெரிகிறதா', 'யானும் தீயவன்', '96' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் படங்களை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது நிதினுடன் 'தம்முடு' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
வேணு ஸ்ரீராம் இயக்கும் இப்படத்தில் காந்தாரா நடிகை சப்தமி கவுடாவும் நடிக்கிறார். இது அவரது முதல் தெலுங்கு படமாகும். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு தயாரிக்கிறார்.
இந்நிலையில், வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.