ஹீ-மேன் ரிட்டர்ன்ஸ்...வைரலாகும் ‘ மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ்’ டீசர் டிரெய்லர்

இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.;

Update:2026-01-23 12:25 IST

சென்னை,

1980களில் பிரபலமான ஹீ-மேன் கதைகளை அடிப்படையாகக் கொண்டு ’மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ்’ (Masters of the Universe) என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் நிக்கோலஸ் கலிட்சின், ஜாரெட் லெட்டோ, இட்ரிஸ் எல்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் டிராவிஸ் நைட் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு அவர், பம்பிள்பீ (Bumblebee), குபோ அண்ட் தி டூ ஸ்ட்ரிங்ஸ் (Kubo and the Two Strings) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ’மாஸ்டர்ஸ் ஆப் தி யூனிவர்ஸ்’படத்தின் டீசர் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிராவிஸ் நைட் இயக்கியுள்ள இந்த திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில், ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்