அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.;

Update:2025-06-24 08:07 IST

சென்னை,

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சமீபத்திய தகவலின்படி, அல்லு அர்ஜுன் 3 மாதங்கள் மும்பையில் தங்கி இந்த படப்பிடிப்பில் ஈடுபடுவார் எனவும், அது முடிந்ததும், விஎப்எக்ஸ் தொடர்பான காட்சிகளை படமாக்க அல்லு அர்ஜுன் அமெரிக்கா செல்வார் எனவும் கூறப்படுகிறது.

'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார்.

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் அட்லீ. இப்படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்