நடிகர் கார்த்தி பிறந்தநாளையொட்டி "சர்தார் 2" படக்குழு வெளியிட்ட சிறப்பு போஸ்டர்
கார்த்தியின் 'சர்தார் 2' படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கி இருந்தார். அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான 'வா வாத்தியார்' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு, கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் 'சர்தார்'. இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் கார்த்தி. இந்த படத்தின் வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. முதலில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது அவர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கிய கதாபாத்திரங்களில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ வெளியாகி வைரலானது.
சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.எஸ்.ஜே சூர்யா பிளாக் டாகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்தியின் 'சர்தார் 2' படம் வருகிற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்து 'சர்தார் 2' படக்குழு புது போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அதில், கார்த்தி துப்பாக்கியுடன் இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. இது ரசிகர்களிடம் படம் குறித்த ஆவலை ஏற்படுத்தியுள்ளது.