'வா வாத்தியார்' படத்திற்கு வந்த திடீர் சிக்கல்

‘வா வாத்தியார்’ படத்தில் நடிகர் கார்த்தி, எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார்.;

Update:2025-06-15 17:52 IST

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மெய்யழகன்'. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 என்ற திரைப்படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி தனது 26வது படமான 'வா வாத்தியார்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அவருக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'வா வாத்தியார்' படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து போஸ்டர்களும், டீசரும், முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படம் எப்போது திரைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என்பது போன்ற பேச்சுகள் அடிபடுகிறது. இதற்கிடையில், இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், தீடிர் பண சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் படத்தினை எதிர்பார்த்த நாளில் வெளியிட முடியாது என்று கூறப்படுகிறது. 

 

Tags:    

மேலும் செய்திகள்