"மார்ஷல்" படத்தில் வில்லனாக மிரட்ட வரும் ஆதி
நடிகர் ஆதி வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.;
சென்னை,
நடிகர் கார்த்தி தற்போது ‘வா வாத்தியார்', ‘சர்தார்-2' படங்களில் நடித்து முடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கைதி-2' படத்தில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழ் இயக்கி வரும் ‘மார்ஷல்' என்ற படத்தில் கார்த்தி நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகள் கடலோர மாவட்டங்களில் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க மலையாள நடிகர் நிவின் பாலியிடம் கேட்கப்பட்டது. ஆனால் ‘கால்ஷீட்' பிரச்சினையால் அவர் நடிக்க முடியாமல் போன நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆதி ஒப்பந்தமாகி இருப்பதாக பேசப்படுகிறது.
தமிழில் ‘மிருகம்', ‘ஈரம்', ‘அரவாண்', ‘மரகத நாணயம்', ‘சப்தம்' படங்களில் கதாநாயகனாக நடித்த ஆதி, வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை ஆகும்.