துல்கர் சல்மானுக்கு ஜோடியான அறிமுக நடிகை

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.;

Update:2026-01-19 11:59 IST

சென்னை,

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும்.

கடைசியாக ‘காந்தா’ படத்தில் நடித்திருந்த துல்கர் சல்மான் தற்போது நடிக்கும் புதிய படம் 'ஆகாசம்லோ ஒக்க தாரா'. இதில் நாயகியாக சாத்விகா வீரவல்லி நடிக்கிறார். இதன் மூலம் இவர் நடிகையாக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், சாத்விகாவின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தினை கீதா ஆர்ட்ஸ், ஸ்வப்னா சினிமாஸ் மற்றும் லைட் பாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. பவன் சடிநேனி இயக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படமும் தமிழ்,தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய  மொழிகளில் வெளியாகவுள்ளது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்