’எந்த கதாபாத்திரத்திலும் இயல்பாக நடிப்பார்...அந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும்’ - நடிகை சாக்சி வைத்யா

சாக்சி வைத்யா நடிகர் நானியைப் பற்றி சுவாரசியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார்.;

Update:2026-01-19 12:40 IST

சென்னை,

அகில் அக்கினேனி நடித்த ‘ஏஜென்ட்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாக்சி வைத்யா. இந்தப் படம் பெரிய அளவில் தோல்வியடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் நடித்த ‘காண்டிவ தாரி அர்ஜுனா’ படமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

சமீபத்தில் அவர், நடிகர் ஷர்வானந்த்துக்கு ஜோடியாக ‘நாரி நாரி நடும முராரி’ படத்தில் நடித்திருந்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான இந்தப் படம் ரசிகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று, சாக்சி வைத்யாவுக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் சாக்சி வைத்யா நடிகர் நானியைப் பற்றி சுவாரசியமான கருத்துகளை பகிர்ந்துள்ளார். தெலுங்கு ஹீரோக்களில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர் நானி என்றும், அவர் எந்தக் கதாபாத்திரத்திலும் மிகவும் இயல்பாக நடிப்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், நானி நடித்த படங்களில் ‘ஹாய் நான்னா’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்தது என்றும் கூறியுள்ளார். தற்போது, சாக்சி வைத்யாவின் இந்த கருத்துகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்