"கூலி" படத்திற்கு சம்பளம் வாங்காத அமீர்கான் - ஏன் தெரியுமா?
'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.;
சென்னை,
கூலி படத்தில் நடித்ததற்காக அமீர் கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி பரவியநிலையில் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்றுமுன்தினம் வெளியான திரைப்படம் 'கூலி'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நாகர்ஜுனா, அமீர்கான், சத்யராஜ், சவுபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'கூலி' படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், "கூலி" படத்திற்கு சம்பளம் வாங்கவில்லை என்று அமீர்கான் கூறி இருக்கிறார். அவர் கூறுகையில்,
''கூலி' படத்திற்காக நான் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. ரஜினி சார் மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறேன். அவருடன் நடித்ததே எனக்குப் பெரிய பரிசுதான். அதனால் பணம் பற்றி யோசிக்கக் கூட முடியவில்லை“ என்றார்.