'எல் 2 எம்புரான்' படத்தில் இணைந்த 'தலைவா' நடிகர்

வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது.;

Update:2025-02-26 11:33 IST

சென்னை,

பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தில் நடித்துள்ள முக்கிய கதாபாத்திர அறிமுகங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், தற்போது நடிகர் அபிமன்யு சிங் 'எல் 2 எம்புரான்' படத்தில் இணைந்துள்ளதாக அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்ட்ரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் அவர் பல்ராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிமன்யு சிங் தமிழில், விஜய்யுடன் 'வேலாயுதம்', 'தலைவா' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்