சயிப் அலிகான், அக்‌சய் குமார் இணைந்து நடிக்கும் ’ஹைவான்’ படப்பிடிப்பு நிறைவு

இந்த படம் 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ' ஒப்பம்' படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.;

Update:2025-12-08 11:06 IST

நடிகர்கள் சயிப் அலிகான் மற்றும் அக்‌சய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் படம் ஹைவான். இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படம் 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ' ஒப்பம்' படத்தை அடிப்படையாகக் கொண்டது .

கே.வி.என் புரொடக்சன்ஸ் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலஜா தேசாய் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், சயாமி கெர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு அக்ஷய் குமார் மற்றும் சயிப் அலிகான் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்பை, கொச்சி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அதனை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்