பைசன் படப்பிடிப்புக்கான பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்த நடிகர் துருவ்

'வலி' எனக்குறிப்பிட்டு பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிரது.;

Update:2025-11-02 11:05 IST

சென்னை,

பைசன் படப்பிடிப்புக்கான பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை 'வலி' எனக்குறிப்பிட்டு நடிகர் துருவ் பகிர்ந்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பைசன். இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் லால், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த நிலையில், பைசன் படப்பிடிப்புக்கான பயிற்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோவை நடிகர் துருவ் பகிர்ந்துள்ளார். 'வலி' எனக்குறிப்பிட்டு பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிரது.

Full View

Tags:    

மேலும் செய்திகள்