பள்ளி, கல்லூரி நாட்களில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்...பகிர்ந்த நடிகை ஜெமி லீவர்
இதுபோன்ற சம்பவங்களை தான் மீண்டும் சந்திக்க விரும்பவில்லை என நடிகை ஜெமி லீவர் கூறினார்.;
சென்னை,
பாலிவுட் திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகையாக இருப்பவர் ஜேமி லீவர். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தனக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக பேசி இருக்கிறார். அவர் கூறுகையில்,
எங்கள் பள்ளியில் உள்ள பஸ் நடத்துனர் ஒருவர் எங்களை தகாத முறையில் தொடுவார். அவர் எங்கள் பாதுகாவலராக இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக எங்களை தொட்டு பிடிப்பார். இந்த சம்பவங்கள் அனைத்தும் ஒரு கெட்ட கனவு போன்றவை.
இதுபோன்ற சம்பவங்களை நான் மீண்டும் சந்திக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட அனுபவங்கள் கல்லூரி வாழ்க்கையிலும் தொடர்ந்தது. இந்த சம்பவங்களை பற்றி நீண்ட காலமாக பேசவில்லை. ஆனால் இப்போது அவற்றை பற்றி பேசுவது முக்கியம் என உணர்கிறேன்' என்றார்.