நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது
வருகிற 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது.;
சென்னை,
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பிரபல நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு அவர் அளித்த சிறப்பான பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது குறித்து இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோகன்லாலின் அற்புதமான சினிமா பயணம் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. பழம்பெரும் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான இவர், இந்திய சினிமாவுக்கு அளித்த தனித்துவமான பங்களிப்புக்காக கௌரவிக்கப்படுகிறார். அவரது நிகரில்லா திறமை, பன்முகத்தன்மை மற்றும் அயராத உழைப்பு ஆகியவை இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு பொன்னான தரத்தை அமைத்துள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருகிற 23 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மோகன்லாலுக்கு இந்த விருது வழங்கப்படும்.
மோகன்லால்:
நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்.
நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகருக்கான தேசிய விருது உள்பட பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
2001-ல் பத்மஸ்ரீ விருதும், 2019-ல் பத்ம பூஷண் விருதும் பெற்றுள்ளார்.