பிருத்விராஜின் புதிய பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
நடிகர் பிருத்விராஜ் நடிக்கும் ‘ஐ நோபடி’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.;
தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகரான பிருத்விராஜ் மலையாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக நல்ல படங்களைக் கொடுத்ததுடன் லூசிபர், ப்ரோ டாடி, எம்புரான் ஆகிய திரைப்படங்களை இயக்கி இயக்குநராக அங்கீகாரம் பெற்றார்.குறிப்பாக, மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான எம்புரான் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது..அண்மையில், இவர் நடிப்பில் வெளியான ஹிந்திப் படமான சர்சாமின் கலவையான விமர்சனங்களையே பெற்றது..
தற்போது, மம்மூட்டியின் ரோர்சாக் படத்தை இயக்கிய இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கத்தில் ‘ஐ நோபடி’ என்கிற திரைப்படத்தில் பிருத்விராஜ் நாயகனாக நடிக்கவுள்ளதை போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். எம்புரானுக்குப் பின் பிருத்விராஜ் நடிக்கும் மலையாளப் படம் இது என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.