நடிகர் ஷாருக்கானுக்கு இன்று 60-வது பிறந்தநாள்
ஷாருக்கானின்பிறந்தநாளை கொண்டாட அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.;
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது 60-வது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாட உள்ளார். நடிகர் ஷாருக்கானின் 60-வது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் அவருக்கு வாழ்த்து மழை பொழிய அவருடைய வீடு முன்பு நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் குவிய தொடங்கினர்.