'கேஜிஎப்' பட நடிகையுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நானி

நானி தயாரித்து நடித்துள்ள படம் 'ஹிட் 3';

Update:2025-04-27 14:34 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான 'சூர்யாவின் சனிக்கிழமை' மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது நானி தயாரித்து நடித்துள்ள படம் 'ஹிட் 3'.

சைலேஷ் கொலானு இயக்கியுள்ள இப்படத்தில் கேஜிஎப் பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற 1-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் நானி, நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்