சிவகார்த்திகேயன் சாருடன் நடிக்க ஆசை...! மனம் திறந்த நடிகை ஆர்ஷா சாந்தினி
நடிகை ஆர்ஷா சாந்தினி நடித்துள்ள ஹவுஸ் மேட்ஸ் படம் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகை ஆர்ஷா சாந்தினி, தற்போது தர்ஷனுடன் இணைந்து ஹவுஸ் மேட்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தினை இயக்குநர் ராஜவேல் எழுதி இயக்கியுள்ளார். இதில் காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில், நடிகை ஆர்ஷா சாந்தினி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, "தமிழ் சினிமாவில் அறிமுகமாகுவது எனக்கு ஒரு கனவாக இருந்தது. அது நிறைவேறி வரும் சந்தோஷத்தில் இருக்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி," என்றார் ஆர்ஷா.
தற்போதைய தமிழ் நடிகர்களில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர், "வருங்காலத்தில் சிவகார்த்திகேயன் சார் உடன் நடிக்க ஆசை. அவரது நடிப்பு, காமெடி டைமிங், அத்துடன் அவரது அட்டிட்யூட் எனக்கு மிகவும் பிடிக்கும்," என்றார். மேலும், இந்த படம் நம் வீட்டில் உள்ள அனைவரையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். காமெடி, உணர்ச்சி மற்றும் குடும்பக்கதைகள் கலந்த ஒரு நல்ல திரைப்படம் இது இருக்கும். என்று கூறினார்.