திருப்பதி கோவிலில் நடிகை சம்யுக்தா மேனன் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சம்யுக்தா மேனன் சாமி தரிசனம் செய்தார்.;

Update:2025-03-14 21:50 IST

திருப்பதி,

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் சம்யுக்தா மேனன் தீவண்டி, லில்லி, கடுவா, தெலுங்கில் பீம்லா நாயக் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் களரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, தனுசுக்கு ஜோடியாக வாத்தி படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சம்யுக்தா இன்று திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த அவரை, அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து வைத்தனர். ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்