திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் விக்ரம் பிரபு குடும்பத்துடன் சாமி தரிசனம்

விக்ரம் பிரபு நடித்துள்ள 'ரத்தமும் சதையும்' திரைப்படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-12-10 06:53 IST

திருமலை,

'கும்கி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது தென்னிந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக உள்ளார். இவர் தற்போது, இயக்குனர் ஹரேந்தர் பாலச்சந்தர் இயக்கத்தில் 'ரத்தமும் சதையும்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் விக்ரம் பிரபு நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் அர்ச்சகர்கள் பிரசாதங்களை வழங்கினர்.

அதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், சாமி தரிசனம் மனதில் அமைதியும், ஆனந்தமும் அளித்தது. நான் நடித்துள்ள ‘ரத்தமும் சதையும்’ புதிய படம் வருகிற 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் வெற்றிபெற வேண்டி கொண்டேன். இந்த படம் பார்வையாளர்களின் அன்பையும், ஆதரவையும் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்