முத்தக் காட்சிகளில் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகைகள்!

முத்தக்காட்சிகள் தென்னிந்திய திரை உலகிலும் அதிகரித்து வருகிறது.;

Update:2025-08-20 10:55 IST

மும்பை,

திரை உலகை பொருத்தவரை முத்தக் காட்சிகள் என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. இதுமட்டுமின்றி லிப்லாக் காட்சிகள் பெரும்பாலான படங்களில் அத்தியாவசிய தேவை என்பது போல் ஆகி தவறாமல் இடம் பெற்று வருகிறது.

தமன்னா: தமன்னா அவரது ஆரம்ப கால கட்டங்களில் முத்தக் காட்சிகளில் நடிப்பதில்லை என்று சில ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தார். அவரது முத்த மறுப்பு கொள்கை ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற வெப் தொடரில் தவிடு பொடியாகியது. அந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த விஜய் வர்மாவுடன் லிப்லாக் முத்தம் மட்டுமல்ல, நெருக்கமான காட்சிகளில் ரசிகர்களை அலற விட்டு விட்டார்.

ஆலியாபட்: திருமணத்திற்கு பிறகு முத்தக் காட்சி வேண்டாம் என்றிருந்த ஆலியாபட் ஆப்டர் மேரேஜ் படத்தில் சக நடிகருடன் முத்தங்களை பகிர்ந்தார்.

கியாரா அத்வானி: பிரபல கதாநாயகிகள் பலர் திருமணத்திற்கு பிறகும் முத்தக் காட்சிகளில் துணிந்து நடித்து வருகிறார்கள். அந்த வகையில் கியாரா அத்வானி ‘வார்-2’ படத்தில் ஹிருத்திக் ரோசனுக்கு பல முத்தங்களை கொடுத்தார். இந்த காட்சிகள் வெளியாகி வைரலானது.

தீபிகா படுகோனே: தீபிகா படுகோனே திருமணமான பின்பும் பிகினி உடையில் ‘பைட்டர்’ படத்தில் ஹிருத்திக் ரோசனுடன் லிப்லாக் காட்சியில் நடித்தார்.

இதுபோன்று முத்தக்காட்சிகள் தென்னிந்திய திரை உலகிலும் அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்