"என்னுடைய முதல் படத்திற்கு பிறகு அலட்சியமாக இருந்துவிட்டேன்... " - நடிகை சித்தி இட்னானி
சித்தி இட்னானி தற்போது ரெட்ட தல படத்தில் நடித்துள்ளார்.;
சென்னை,
அருண் விஜய் நடிப்பில் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரெட்ட தல’. இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம்.சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 25ம் தேதி வெளியாகிறது
இந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் நடிகை சித்தி இத்னானி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,
"என்னுடைய முதல் படத்திற்கு பிறகு அலட்சியமாக இருந்துவிட்டேன். அப்போது எனக்கு ‘இது சுலபம்’ என்ற மனநிலை இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஒரு கலைஞனை முன்னேற செய்வது அவனுள் இருக்கும் பசியே என்று புரிந்தது.
ஒரு நடிகையாக, நடனம், காதல் காட்சிகளில் தோன்றி, மறைந்து விட நான் விரும்பவில்லை. ஒரு அர்த்தமுள்ள கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். இந்த படத்தில் எனக்கு ஒரு வலிமையான மற்றும் முக்கியமான கதாபாத்திரம் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அளித்த படக்குழுவுக்கு என் நன்றி" என்றார்.