’அதெல்லாம் எனக்கு தெரியாது... நானும் விஜய் ரசிகைதான்’ - ஸ்ரீலீலா

விஜய்யின் ஜனநாயகன் பற்றி ஸ்ரீலீலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.;

Update:2025-12-17 05:30 IST

சென்னை,

சமீப காலமாக ஸ்ரீலீலாவுக்கு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. அதே நேரம் அவருக்கு வாய்ப்புகளும் குறையவில்லை, அதிகரித்துதான் வருகின்றன. அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாகி வருகிறார். அவரது தமிழ் படமான 'பராசக்தி' ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வர உள்லது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதற்கிடையில், ஸ்ரீலீலா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது விஜய்யின் ஜனநாயகன் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஜனநாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஸ்ரீலீலா பதிலளித்து கூறிகையில்,

“ஜனநாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா என்றெல்லாம் எனக்கு தெரியாது. நானும் விஜய் ரசிகைதான். ஜனநாயகன் படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார். பகவந்த் கேசரி படத்தில் ஸ்ரீலீலா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்