’ஒரு நடிகையாக என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லும் படம் பராசக்தி’ - ஸ்ரீலீலா
பராசக்தி படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து ஸ்ரீலீலா பேசினார்.;
சென்னை,
சமீப காலமாக ஸ்ரீலீலாவுக்கு பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. அதே நேரம் அவருக்கு வாய்ப்புகளும் குறையவில்லை, அதிகரித்துதான் வருகின்றன. அவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாகி வருகிறார். அவரது தமிழ் படமான 'பராசக்தி' ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இதற்கிடையில், ஸ்ரீலீலா சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவரது கதாபாத்திரம் குறித்து சுவாரசியமாகப் பேசினார்.
அவர் பேசுகையில், ’இத்தனை வருடங்களாக நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். முதல் முறையாக, என்றும் நிலைத்து நிற்கும் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அதுதான் 'பராசக்தி'. இது 60களில் நடக்கும் கதை. சுதா கொங்கரா எனது கதாபாத்திரத்தை அற்புதமாக வடிவமைத்துள்ளார். எனது வேடத்தைப் பார்க்கும்போது, கடந்த கால நாயகிகளைப் பார்ப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஒரு நடிகையாக என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் படம் இது," என்றார்.