குறையாத ஓட்டம்...''சிகிரி '' பாடலின் அடுத்த சாதனை

ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்தப் பாடல், 150 மில்லியன் (15 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது.;

Update:2025-12-17 01:45 IST

சென்னை,

“பெத்தி” படத்தின் முதல் பாடலான “சிகிரி சிகிரி” சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த இந்தப் பாடல், தற்போது 150 மில்லியன் (15 கோடி) பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கில் மட்டும் இப்பாடல் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது.

இது ராம் சரணின் வாழ்க்கையில் மற்றொரு மைல்கல்லாக அமைந்துள்ளது. இது பெத்தி' படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

இந்தப் பாடலுக்குப் பெரும் உற்சாகத்தை அளிக்கும் சக்தியாக ரகுமானின் கவர்ச்சிகரமான இசையும், ராம் சரணின் நடனமும் உள்ளன. புச்சி பாபு சனா இயக்கிய "பெத்தி" படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்