’துரந்தர் 2’ , ’டாக்ஸிக்’ தாக்கம் - தனது பட ரிலீஸை ஒத்திவைத்த அஜய் தேவ்கன்?
'துரந்தர் 2' யாஷின் பான் இந்தியன் படமான டாக்ஸிக் படத்துடன் மோத உள்ளது.;
சென்னை,
தற்போது பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வரும் படம் துரந்தர். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்த இந்த படத்தின் 2-ம் பாகமும் விரைவில் வெளியாக உள்ளது.
இது யாஷின் பான் இந்தியன் படமான டாக்ஸிக் படத்துடன் மோத உள்ளது. அடுத்தாண்டு மார்ச் 19 அன்று பாக்ஸ் ஆபீஸில் நேரடி மோதலுக்கு தயாராக உள்ளன.
இதற்கிடையில், தமால் படத்தின் நான்காவது பாகமான அஜய் தேவ்கனின் தமால் 4, அதே தேதியில் வெளியாகவிருந்தது. ஆனால் அஜய் தேவ்கன், பாக்ஸ் ஆபீஸை மனதில் கொண்டு, தனது படத்தை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சமீபத்திய தகவலின்படி, அஜய் தேவ்கனும் படக்குழுவினரும் தற்போது படத்தை மே மாதம் வெளியிட திட்டமிட்டுள்ள தெரிகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.