’அகண்டா 2’வின் தாக்கம் - அடுத்தாண்டுக்கு தள்ளிப்போன ’சைக் சித்தார்த்தா ’

இப்படத்தில் ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கிறார்.;

Update:2025-12-10 17:51 IST

சென்னை,

ஸ்ரீ நந்து கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘சைக் சித்தார்த்தா’. வருண் ரெட்டி இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் ஷ்யாம் சுந்தர் ரெட்டி துடி தயாரிப்பாளராகவும், ஸ்மரண் சாய் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தில் யாமினி பாஸ்கர் கதாநாயகியாக நடித்திருக்கிரார். மேலும், நரசிம்ம எஸ், பிரியங்கா ரெபேக்கா ஸ்ரீனிவாஸ், சுகேஷ், வடேகர் நர்சிங் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படம் வருகிற 12-ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படம் அதே நாளில் வெளியாக உள்ளதால், படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி இருக்கிறது. அதன்படி, இப்படம் ஜனவரி 1-ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்