ஒரே மாதத்தில்...அடுத்தடுத்து திரைக்கு வரும் ஹெபா படேலின் படங்கள்
முதல் நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.;
சென்னை,
ஹெபா படேல் கிட்டத்தட்ட10 வருட காலமாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இருப்பினும், அவருக்கு முதல் நிலை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இவர் கடைசியாக ஒடெலா 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் மேரியோ என்ற படத்துடன் ரசிகர்கள் முன்னிலையில் வர இருக்கிறார். மேரியோ படம் வருகிற 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இப்படம் வெளியானதற்கு ஒரு வாரம் பின்பு ஹெப்பா, ஈஷா என்ற திகில் படத்துடன் திரையரங்குகளுக்கு வர உள்ளார். இப்படம் வருகிற 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவர் மீண்டும் இளம் ஹீரோ டிரிகுனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். இருவரும் 24 கிஸ்ஸஸ் படத்தில் இணைந்து நடித்திருந்தனர்.