‘சிறை’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் பிரபு நடிக்கும் ‘சிறை’ படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-12-10 18:33 IST

சென்னை,

நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ‘டாணாக்காரன்’ படத்தைத் தொடர்ந்து, அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார்.

இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக உருவாகியுள்ளது.

இதனை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ சார்பில், தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்‌ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.

வெற்றிமாறனின் உதவியாளர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கி உள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.‘சிறை’ திரைப்படம் இம்மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘சிறை’ படத்தின் டிரெய்லர் வரும் 12ம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்