அஜித்தின் “அட்டகாசம்” படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு
அஜித் நடிப்பில் வெளியான ‘அட்டகாசம்’ திரைப்படம் வரும் 28ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.;
கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் அஜித்தின் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸ் அறிவிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் ‘அட்டகாசம்’ திரைப்படம் 2004-இல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் அஜித் இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது.
இந்நிலையில், இந்தப் படத்தை வரும் நவம்பர் 28ம் தேதி ரீ-ரிலீஸாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஐஎப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் ரீ-ரிலீஸ் செய்கிறார். கடைசியாக அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.