நீண்ட நாள் காதலியுடன் பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தம்...புகைப்படங்கள் வைரல்

திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது;

Update:2025-11-01 07:03 IST

சென்னை,

நடிகர் அல்லு சிரிஷுக்கும் அவரது நீண்டநாள் காதலியான நைனிகாவுக்கும் நேற்று ஐதராபாத்தில் பிரமாண்ட நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த சில வருடங்களாக காதலித்து வரும் சிரிஷும் நைனிகாவும், தங்கள் அன்புக்குரியவர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் மோதிரங்களை மாற்றிக் கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன

ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Tags:    

மேலும் செய்திகள்